R.Maheshwary / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
அவிசாவளையிலிருந்து டிக்கோயா- போடைஸ் தோட்டத்திலுள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற இளைஞர் ஒருவர், நேற்று (25) அதிகாலை ஹட்டன் நகரில் வைத்து, ஒட்டோ சாரதிகள் சிலரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
ஹட்டன் நகர மத்தியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளையிலிருந்து ஹட்டன் வரை பஸ்ஸில் பயணித்துள்ள அவர், அன்றைய தினமே அவிசாவளைக்கு திரும்ப வேண்டிய நிலையில், போடைஸ் தோட்டத்துக்குச் செல்வதற்கு ஓட்டோவொன்றில் 600 ரூபாய் வாடகை அடிப்படையில் பயணித்து, மீண்டும் அதே ஓட்டோவில் ஹட்டனுக்கு வந்து இறங்கியுள்ளார்.
இதன்போது தான் முன்னதாக இணங்கியதுக்கு அமைய 600 ரூபாய் கட்டணத்தை ஓட்டோ சாரதியிடம் வழங்கியுள்ளார். எனினும் 600 ரூபாய் போதாதென தெரிவித்த ஓட்டோ சாரதி, 1800 ரூபாயை கோரியுள்ளார்.
எனினும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அந்த இளைஞன் தெரிவித்ததையடுத்து, குறித்த ஓட்டோ சாரதி ஏனைய ஓட்டோ சாரதிகளுடன் இணைந்து அந்த இளைஞரை பலவந்தமாக ஓட்டோவுக்குள் ஏற்றி கடுமையாகத் தாக்கி, வெளியே தள்ளியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலை அதிகாரியொருவரிடம் வினவியபோது, ஹட்டன் நகரில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாகவும் எனினும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யாத காரணத்தால், சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .