2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’அவிசாவளைக் கிளை ஊழியர்களையும் பிசிஆருக்கு உட்படுத்தவும்’

Kogilavani   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் அவிசாவளைக் கிளையில் பணியாற்றும் சகல ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, மேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்தார்.

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலர், மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதுடன் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அவிசாவளையிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வந்துச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டதால் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் எனவவே, மேற்படித் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினபுரி, குருவிட்ட, கரபிஞ்ச, தெப்பனாவ, பரகடுவ, எல்லாவல, தலாவிட்டிய, எஹலியகொட, கரதன, மின்னான, கெடஹெத்த, தியுரும்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, கரவனெல்ல, தெரனியகல, யட்டியந்தொட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மேற்படித் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் கர்ப்பிணிகள் விடுமுறைப் பெற்றுச் சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X