2025 மே 15, வியாழக்கிழமை

அஸ்கிரிய விகாரைக்கு அருகில் விபசார விடுதி சுற்றிவளைப்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி- அஸ்கிரிய தம்மசித்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில், இரகசியமான முறையில் நடத்தி வரப்பட்ட விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 3 பெண்களும் விடுதியின் முயாமையாளரும் உள்ளடங்குவதாக கண்டி பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகாமையாளரைக் கைதுசெய்யும் போது, அவரிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அஸ்கிரிய விகாரை மற்றும் பிரதான பாடசாலையொன்றுக்கு அருகில் வாடகை அடிப்படையில் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரால் இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டு, அங்கு விபசார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் மொரட்டுவ மற்றும் நுகவெல பிரதேசங்களைச் சேர்ந்த 30- 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .