2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஆசிரிய பயிலுனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுனர்களும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் “வரிசை வாழ்க்கை நிறுத்து”, ”பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்” ,“மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.  இதன்போது பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X