2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஆசிரியரின் மரணம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஆசிரியர் மகேஸ்வரனின் மரணத்தை சிறிய விபத்தாக காட்டி  உண்மையை மூடி மறைக்க எவரும்  முயற்சிக்கக் கூடாது   என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான  கணபதி கனகராஜ், விபத்துக்கான உரிய விசாரணையை முறையாக  மேற்கொள்ள வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

பொதுவாக வீதிகள் செப்பனிட படும்போது கூட, வீதிகள் செப்பனிடப் படுவதாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள்  வழங்கப்படுவதுடன் இரு பக்கங்களிலும் வாகனத்தை நிறுத்தி சரியான முறையில் போக்குவரத்தை செய்வதற்கு ஊழியர்கள் மூலமாக வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் எவ்வித பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றாமல் ஒரு பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்றை வெட்டியதால் பெறுமதிமிக்க உயிர் ஒன்றை அநியாயமாக இழக்கச் செய்துள்ளனர்.

அத்துடன் இதை ஒரு சிறிய விபத்தாக கருதி மூடிமறைக்க முற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. குறிப்பிட்ட மரத்தை வெட்டி  வீழ்த்துவதற்கு அனுமதியை வழங்கிய அரச  நிறுவனங்கள் உட்பட  அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் மகேஸ்வரனின் மரணத்திற்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான கவனக்குறைவான செயல்களில்  எவரும் ஈடுபடக்கூடாத வகையில் வெளிப்படையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X