2025 மே 08, வியாழக்கிழமை

ஆசிரியரின் விடுதிக்குள் ஆழக்குழி: நால்வருக்கு தண்டம்

Editorial   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.தி பெருமாள்

மஸ்கெலியா மௌசாகலை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் விடுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய திங்கட்கிழமை (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ள பொலிஸார், மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட விடுதி ஆசிரியர் ஒருவரின் விடுதி எனவும் அங்கு  35 அடி ஆழமான குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறினர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டபோது, நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தண்டப்பணத்தை செலுத்தியதன் பின்னர் அந்த நால்வரும் நீதிமன்றத்தினால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் என  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X