2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஆசிரியர் உயிரிழந்தமைக்கு ஆசிரிய சங்கம் எதிர்ப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 

முறையான அனுமதியின்றியும் அது மாத்திரமன்றி எவ்வித பாதுகாப்புமின்றி மரம் வெட்டப்பட்டதால் ஒரு ஆசிரியரை இழந்திருக்கின்றோம். இதற்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதாக இலங்கை ஜனநாயக ஆசிரிய சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.

தலவாக்கலை மல்லியப்பு சந்தியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் பாரிய மரம் ஒன்றின் கிளைகளை அகற்றும் போது அது மின் கம்பத்தில் முறிந்து விழுந்ததில் வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் அமரர் மகேஸ்வரன் என்பவராவார்.

இவருடைய இறப்பிற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டதோடு இது குறித்து ஆசிரிய சங்கங்கத்தினரும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து ஆசிரிய சங்கத்தின் பொது செயலாளர் கருத்து தெரிவிக்கையில். ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு அனுதாபம் தெரிவிக்கு அதேவேளை யாராக இருந்தாலும் மனித உயிர் ஒரு பெருமதியான உயிர். எனவே ஒரு பெருமதியான ஒரு உயிர் பழியாகியிருக்கின்றது.

குறித்த வீதியானது மிக பிரதான வீதி, குறிப்பாக தலவாக்கலை நுவரெலியா ஏ தரத்திலான வீதியும் கூட எனவே இது ஒரு பிரதான வீதி ,இந்த பிரதான வீதியில் ஒரு மரம் அல்லது கிளை வெட்டி அகற்றப்படுமாகவிருந்தால் முறையான அனுமதி எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு அனுமதி எடுப்பது ஒரு விடயமாகவிருந்தாலும் மரத்தின் கிளை வெட்டப்படும் போது வீதியின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மரத்தின் கிளை விழும் போது ஒரு முறையான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தால் ஒரு வாகனமோ , பாதசாரியோ இவ்விடத்திற்கு வந்திருக்க முடியாது .

இருப்பினும் இவ்விடத்தில் ஒரு விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.இவ்வாறான விபத்து ஏற்பட்டதிற்கு காரணம் சம்பந்தப்பட்டவர்களின் கவனயீனமே.

எனவே இவ்விடத்தில் இருக்கும் பொது மக்கள் வீதியை மறித்து ஆர்பாட்டம் மேற்கொள்கின்றார்கள் என்றால் ஒரு உயிரை பறி கொடுத்தவர்களுக்குதான்  வலியும் அந்த உயிரின் மதிப்பும் தெரியும்.அந்த உயிரை இவர்களால் மீள கொடுக்க முடியாது.

எனவே இவ்விடத்தில் ஒரு பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொண்ட அனைவரையும் நாங்கள் ஆசிரியர் சங்கம் என்றவகையில் மிக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு உரியவர்களுக்கு சரியான தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X