2025 மே 17, சனிக்கிழமை

ஆசிரியர் ஒருவர் மீது இ.தொ.கா உறுப்பினர்கள் தாக்குதல்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது,  பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹல்துமுல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக,  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .