2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்; மூவருக்கு விளக்கமறியல்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா      

பண்டாரவளை - பூனாகலையில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்றுமுன்தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அரசியல்கட்சி ஒன்றின் ஆதரவாளர்களால் சிலரால் தாக்குதலுக்கு இலக்கான குறித்த  ஆசிரியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் செய்த  முறைப்பாட்டுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .