2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதி

R.Maheshwary   / 2022 நவம்பர் 03 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

ஹட்டன் வலய கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணி தமிழ் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் 31 ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில், வெறுமனே 17 ஆசிரியர்கள் மாத்திரமே பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனேகமான வகுப்புக்கள் பாடவேளைகளில் ஆசிரியர்களின்றி கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை என்றும் பெற்றோர் குற்றஞ்சுமத்துகின்றனர்

கடந்த மூன்று மாதங்களாக இந்நிலை தொடர்கின்ற நிலையில், இப்பாடசாலையிலிருந்து இடம்மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவேனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்  இதனால் மாணவர்களின் கல்வி ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆசிரியர்களை உடன் நியமிக்க ஹட்டன் கல்வி பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .