R.Maheshwary / 2022 ஜனவரி 01 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசை காட்டி மோசம் செய்வதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) நோர்வூட் –தியஸ்ரீகம பகுதியில் அம்பகமுவ உப பிரதேசசெயலாளர்
காரியாலயத்தை உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது
கூட்டு ஒப்பந்தம் மாத்திரமே. சிலர் கூட்டு ஒப்பந்தம் தேவையில்லையென கூறுகிறார்கள் என்றார்.
தற்பொழுது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலை காரணமாக, இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தைபொங்கள் விழா போன்ற நிகழ்வுகளை நடத்தாது எனத் தெரிவித்த அவர், பிறக்கவிருக்கும் புதுவருடத்தில் மலையக மக்கள் மாத்திரமல்லாது அனைத்து மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .