2025 மே 15, வியாழக்கிழமை

ஆணொருவரின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

மஹியங்கனை -பதியதலாவ வீதியில் தெய்கொல்ல பாடசாலைக்கு அருகாமையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் இருந்து  நேற்று மாலை 3.00 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் குறித்த நபர் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .