Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி- பன்விலை ஆத்தளை தோட்ட மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலவசமாக மரக்கறி விதைகள் வழங்கப்பட்டன.
நாட்டின் தற்போதைய நிலையில், மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குவதைத் தவிர்க்கும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்பட்டதாக பன்விலை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார் தெரிவித்தார்.
முறையான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், உற்பத்தியாளர்கள் எனப் பெயரிடப்பட்டு தொடர்ந்தும் உதவிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
ஆத்தளை தோட்ட மேற்பிரிவு மத்திய பிரிவு மற்றும் கீழ்ப்பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த 500 பேருக்கு பன்விலை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் போஞ்சி, முள்ளங்கி, வெண்டி, மிளகாய் போன்ற பயிர்களை உற்பத்தி செய்வதற்காக இலவசமாக விதைகள் வழங்கி வைக்கப்பட்டன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago