2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆபத்தான நிலையில் தோட்ட தொழிலாளி : ஜீவன் எடுத்துள்ள நடவடிக்கை

Freelancer   / 2022 நவம்பர் 25 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ்  பிரிவில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு சொந்தமான சாமிமலை கவரவில தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளி வாகனமொன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த வாகனத்தில் எரிபொருள் பற்றாக்குறையால் மீண்டும்   அதே தோட்டத்திற்கு வந்து  எரிபொருள் பெற்றுக் கெண்டு மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல நேரிட்டது.

அதன் பின்னர் டிக்கோயா கிழங்கின் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நல்லையா சிவக்குமார் ஆவார்.

இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் விசாரணை நடத்தியதுடன், மறு அறிவித்தல் வரை  ஹொரன  பிலான்டேசனுக்கு சொந்தமான அனைத்து தோட்டங்களிலும் தேயிலை தொழிற்சாலை இருந்து  தேயிலை தூள் வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .