2025 மே 07, புதன்கிழமை

ஆபத்தான நிலையில் லெவன்ட் தோட்ட குடியிருப்பு

R.Maheshwary   / 2021 ஜூன் 04 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

 

யட்டியாந்தோட்டை -லெவன்ட் தோட்டத்தில் உள்ள  லயக் குடியிருப்பொன்று மண்சரிவு அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

குறித்த குடியிருப்பு மண்சரிவை எதிர்நோக்கியுள்ளதென 2016ஆம் ஆண்டு தேசிய கட்டட ஆய்வு மத்திய நிலையம் சுட்டிகாட்டியதையடுத்து, அங்கு வசித்த மக்கள்  சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

எனினும் காலநிலை சீரானதும் அம்மக்கள் தமது பழைய வசிப்பிடத்துக்கே சென்ற நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், லயக்குடியிருப்புக்கு அருகில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், குறித்த லயக்குடியிருப்பில் வசிக்கும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் பேர் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

 

இன்றைய தினம் (4) சம்பவ இடத்துக்கு யட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி வருகை தந்ததுடன், பிரதேச செயலகத்துக்கு தோட்டங்கள் சொந்தமில்லை என்பதால், இந்த விடயம் குறித்து  தோட்ட அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவிப்பதாக மக்களிடம் தெரிவித்துள்ளதுடன், திங்கட்கிழமை தேசிய கட்டட ஆய்வு மத்திய நிலைய  அதிகாரிகளை வரவழைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தோட்ட அதிகாரியோ அரசாங்கத்துக்கு சொந்தமான காணியை மக்களுக்கு வழங்க முடியாது எனதெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X