2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆற்றைச் சுத்திகரிப்பதற்கு ‘பிரதேச சபைக்கு அனுமதி வழங்கவும்’

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பாக்குத் தோட்டத்திலிருந்து கற்பாலம் வரையிலான 4 கிலோமீற்றர் தூரமுடைய ஆற்றைச் சுத்திகரிப்பதற்கான அதிகாரத்தை, நுவரெலியா பிரதேச சபைக்கு வழங்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தான் அனுமதி கோரியுள்ளதாக, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

சீரற்ற வானிலைக் காலத்தில், மேற்படி ஆறு பெருக்கெடுப்பதால், அருகிலுள்ள வீடுகளும் விவசாயக் காணிகளும் பாதிப்படைகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி ஆறு, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பராமரிப்பின் கீழ் காணப்படுகின்ற அதேவேளையில், நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது.

காட்டாற்றைச் சுத்திகரிப்பதற்கும் அகலப்படுத்துவதற்குமான அதிகாரம், நுவரெலியா பிரதேச சபைக்கு இல்லை என்பதால், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எனவே, இந்தக் காட்டாற்றைப் பராமரிப்பதற்கான அதிகாரத்தை, நுவரெலியா பிரதேச சபைக்கு வழங்குமாறு, மாவட்ட செயலாளரிடம் அனுமதிக் கோரப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X