Sudharshini / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பிளவுபடாமல், அனைவரும் இணைந்து நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் தலைமையில், நுவரெலியா நாசரத் விருந்தகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று எமது நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
'1977ஆம் ஆண்டின் பின்னர், இன்று எதிர்க்கட்சி தலைவராக ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும். அதேநேரம், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்கு உரிய அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. இந்நிலை தொடருமானால் எமது நாட்டின் அபிவிருத்தி தொலைவில் இல்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு, எதிர்க்கட்சியின் தலைவர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago