Kogilavani / 2021 மே 24 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூத்த தொழிற்சங்கவாதியான அமரர் சிங்.பொன்னையா, பெயரில் கம்பீரமும் பேச்சில் கர்ஜனையும் கொண்டவர் என்றும் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
அமரர் சிங்.பொன்னையாவின் இரண்டவாது வருட நினைவுதினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
“அமரர் சிங்.பொன்னையா தொழிற்சங்கம், தோட்ட நிர்வாக பேச்சுவார்த்தைகளில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்தார். சிங்காரவேல் பொன்னையா எனும் இவர், தந்தையின் பெயரில் "சிங்" என்ற அடை மொழியோடு சிங்.பொன்னையா என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்
“சிறந்த ஆங்கிலமொழிப் புலமைக்கொண்ட இவர், நான்கு முறை மத்திய மாகாண சபைக்குத் தெரிவாகி, மலையக மக்களுக்காகப் பணியாற்றியுள்ளார். அவர் மறைந்து இரண்டு வருடங்கள் கடந்திருந்தாலும் மலையகத்தின் ஆளுமைமிக்க தொழிற்சங்வாதியாக, மலையக மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago