2025 மே 16, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா அதிரடி: நாளை முக்கிய முடிவு

Editorial   / 2023 ஜனவரி 04 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக, நாளை (05) ஒன்று கூடவுள்ளனர்.

கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் ஒன்றுக்கூடல் காலை 11 மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆராயப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இ.தொ.கா தேர்தலுக்கான உத்திகள், கூட்டணியை அமைத்தல் மற்றும் ஏனைய பொறிமுறைகளை வகுப்பதற்காக இ.தொ.கா இந்த விசேட கலந்தாய்வை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 நாடு முழுவதும் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட வாரியான உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.

மேலும்  ஜனவரி 1 முதல் 10ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலத்திற்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு இ.தொ.கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .