Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செனன் கே.எம். பிரிவு தலைவியை ஹட்டன் பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து, ஹட்டன் - மல்லியப்பு சந்தியில்
ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆரவாளர்கள் குழுமியதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) முறைப்பாடு செய்யப்பட்தையடுத்து, செனன் - கே,எம் பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவியை கைது செய்ய பொலிஸார் செனன் தோட்டத்துக்கு இன்று (18) காலை சென்றனர். இதையடுத்தே, ஹட்டன் - மல்லிகைபூ சந்தியில் பரபரப்பு ஏற்பட்டது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16ஆம் திகதி செனன் கே.எம். தோட்டத்தில் ஏற்பட்ட தீயால் மூன்று வீடுகள் சேதமாகியதுடன் 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் நிர்கத்திக்குள்ளாகினர்.
சம்பவத்தையடுத்து, நேற்று மாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கூரைத்தகடுகளை வழங்க மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் விஜயம் செய்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவி முறைகேடாக நடந்துகொண்டதுடன், பொருள் விநியோகத்துக்கும் தடையேற்படும் வகையில் நடந்துகொண்டதாகவும் கல்லால் தாக்க முற்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரனினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து, ஹட்டன் பொலிஸார், தோட்ட தலைவியை இன்று காலை கைது செய்ய அத்தோட்டத்துக்குச் சென்ற நிலையில் கைது சம்பவம் தொடர்பில் ஆறுமுகம் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கணபதி கணகராஜ் உள்ளிட்டோர் விஜயம் செய்ததுடன், சிறிய முறைபாடொன்றுக்கு ஒருவரை கைதுசெய்ய முடியாது என வாதிட்டனர். பின்னர் தாம் கைது செய்ய வரவில்லை என்றும் முறைபாட்டுக்கமைய விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கவே வந்தோம் எனவும் பொலிஸார் தெரிவித்தன.ர்
இந்நிலையில், மல்லியப்பூ சந்தியில் குழுமிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செமலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களால் அப்பகுதி 2 மணித்தியாலங்கள் வரை பதற்றம் நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து, ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முறைபாட்டுக்கமைய விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஆனால், கைது செய்வதற்கான அவசியம் இல்லை என்றும் அவ்வாறு கைது செய்ய முற்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவித்த பின்னரே இயல்புநிலை ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago