2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இ.தொ.காவின் தேசிய சபை கூடியது

R.Maheshwary   / 2022 மார்ச் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை, கொட்டக்கலையில் இன்று (30) காலை கூடியுள்ளது.

இதில் காங்கிரஸின் தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்ப,  புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் காங்கிரஸின் தவிசாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி, தவிசாளராக மருதுபாண்டி ராமேஸ்வரனை தெரிவு செய்யவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் காங்கிரஸின் உப தலைவர்களும் தெரிவு செய்ய தேசிய சபை கூடவுள்ளது.

இதில் காங்கிரஸ் வசமுள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் நுவரெலியா பிரதேச சபை  தவிசாளர் வேலு யோகராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செண்பகவள்ளி புதிய முகங்கள் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  காங்கிரஸின் பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் தொடர்ந்தும் இருப்பார்  என்றும் உப செயலாளர்களை தெரிவு செய்ய காலம் அறிவிக்கப்படுமெனவும்,இதில் ஐம்பது வீதம் பெண்களுக்கும் ஐம்பது வீதம் ஆண்களுக்கும் இடம் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X