2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இ.தொ.காவிலிருந்து மேலும் ஒருவர் நிறுத்தம்

Freelancer   / 2022 நவம்பர் 18 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம்  உடன் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல்  மெல்கம் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கும், வேலையற்ற இளைஞர்களுக்கும் வழங்க அடையாளம்  காணப்பட்ட  தரிசு நிலங்களை  அவருக்கு நெருக்கமான நபர்களுக்கும், வெளியாருக்கும் வணிக நோக்கில் பிரித்து கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக காங்கிரஸின் உயர் மட்டத்திற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த  உறுப்பினர் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் காங்கிரஸ் உயர் பீடம் அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினருக்கு உத்தியோகப்பூர்வ கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மற்றும் செயலாளர் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .