2025 மே 15, வியாழக்கிழமை

இ.தொ.காவும் எதிர்ப்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்  ராஜபக்‌ஷ

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஊடாக ஒரு வருட காலத்துக்கு ஏலத்துக்கு விடப்பட்டுள்ள வட்ட​வளை- ஹட்டன்ஓயாவில் இரத்தினக்கல் அகழ்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஹட்டன் ஓயாவின் ஐம்பது மீற்றர் தூரம் சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத வகையில் இரத்தினக் கற்களை அகழ்வதற்காக ஓராண்டுக்கு ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், இதற்கு நேற்றைய தினம் (7) மவுண்ட்ஜின் தோட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ், குறித்த இடத்தில் இரத்தினக்கல் அகழ்வதால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் இந்த இரத்தினக்கல் அகழ்வுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .