2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச பஸ்ஸை விட்டோடிய டயர்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

தெரணியாகல பொல்கஸ்வத்த வீதியில், பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் பின் டயர் கலன்று ஓடிவிட்டது.

புதன்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.

இந்த வீதியானது குண்டும் குழியுமாக இருக்கிறது. சப்ரகமுவ மாகாண சபையினார் பராமரிக்கப்படும் இவ்வீதி பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்துள்ளது.

மேடு, பள்ளங்கள் நிறைந்த இந்த வீதியில் வளைவான இடங்களில் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டிருந்தால், உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .