2025 ஜூலை 05, சனிக்கிழமை

இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Sudharshini   / 2015 நவம்பர் 03 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காகச் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே),  தேசிய இளைஞர் மன்றத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இத்தேர்தலை மாவட்ட மட்டத்தில் கபே இயக்கம் கண்காணிக்கும் என்றும் மஹரகமவில் நிறுவப்படும் மத்திய நிலையத்துக்குத் தேவையான உதவிகளையும் வழங்கும்; என்றும் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

'இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களாக்கும்' நோக்குடன் தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்வாக இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது.

இம்முறை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 657 வேட்பாளர்கள், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 334 பிரதேச செயலகங்களில் இத்தேர்தல் இடம்பெற உள்ளது.

தேர்தல் தொகுதி அடிப்படையில் 160 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதுடன், பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் உட்;பட துறை சார்ந்தவர்களுல் 65 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 438,400 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .