2025 மே 15, வியாழக்கிழமை

இது அரசியல் செய்யும் நேரமல்ல

R.Maheshwary   / 2023 ஜனவரி 22 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல என தெரிவித்துள்ள இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம் என்றார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்ல என்பதை  தனது செயல்மூலமே அவர் நிரூபித்துவிட்டார் என்றார்.

நுவரெலியாவில் நேற்று (21) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலால் நாட்டில் ஆட்சிமாறப்போவதில்லை. எனினும், மக்களுக்கு தமது உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும். நாட்டில் தற்போது சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு சம்பளமும், சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை எப்படி நிர்வகிப்பது? என கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .