Freelancer / 2024 ஜூன் 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி ஊடாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டுள்ள 106 தனி வீடுகளுக்கான நினைவு படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முழுமைப்படுத்தப்பட்ட 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை இவர்கள் கூட்டாக மெய்நிகர்(Virtual) ஊடாக திறப்பு விழா செய்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தேவைப்பாடுகளை எங்ளுடைய வேண்டுகோளுக்கினங்க நிறைவேற்றிவரும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். R



12 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
2 hours ago