2025 மே 17, சனிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

Editorial   / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை  நாளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும்  இதன்போது மலையகத்தில் உள்ள பாடசாலைக்கான உதவித் திட்டங்கள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படும்  என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் புஸல்லாவை சரஸ்வதி தேசிய பாடசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த போதே,ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் சமூகத்தை சந்தித்தேன்,  குறைப்பாடுகளை கேட்டறிந்தேன். இப்பகுதியில் சரஸ்வதி மத்திய கல்லூரி முதன்மை பாடசாலையாக விளங்குகின்றது.  தோட்டப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள பழமையான - பாரம்பரியம்மிக்க இப்பாடசாலைக்கு உதவிகளை வழங்க வேண்டியது கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் தனது பொறுப்பாகும்.

நாளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ளேன். இப்பாடசாலை பற்றியும் எடுத்துரைப்பேன். அதுமாத்திரமின்றி  மலையகத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .