2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இந்திய முட்டைக்கு அஞ்சும் வர்த்தகர்கள்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

கோழி முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதிச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, ஹட்டன் நகர முட்டை வர்த்தகர்கள், முட்டையின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த நாட்களில் 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும் விற்பனைச் செய்யப்பட்ட முட்டையொன்று, 12 நாட்கள் கடந்த நிலையில், 57 ரூபாய் அல்லது 58 ரூபாய்க்கு குறைத்து விற்பனைச் செய்யப்பட்டன.

முட்டைகளின் மொத்தவிலை ஓரளவுக்கு குறைந்துள்ளமையால், சில்லறை விலையில் குறைத்துள்ளோம் என்று முட்டை வர்த்தகர்கள் சிலர் தெரிவித்தனர்.

வர்த்தக மாஃபியா மூலமாக முட்டை விலையை அதிகரித்து நுகர்வோருக்கு சங்கடங்களை ஏற்படுத்திய வர்த்தகர்கள், பெருந்தொகையில் கொள்ளையடித்துக்கொண்டனர் என்றும்
நுகர்வோர் தெரிவித்தனர்.

எனினும், கோழி முட்டையை இந்தியாவில் இருந்து இறக்குமதிச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட​தை அடுத்து, முட்டையின் விலையை வர்த்தகர்கள் குறைத்துள்ளனர் எனத் தெரிவித்த
நுகர்வோர் இந்தியாவில் இருந்து அல்ல, வேறெந்த நாடுகளில் இருந்தாவது முட்டைகளை ஆகக் கூடுதலாக இறக்குமதிச் செய்து, குறைந்த விலையில் விற்பனைச் செய்வதன் ஊடாகவே முட்டை
மாஃபியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றனர்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .