2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

’’இந்தியன் கோனர்’’திறந்து வைப்பு

Janu   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்" எனும் தொணியில்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் (கண்டி) காரியாலயத்தினூடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் "இந்தியன் கோனர்" எனும் நூலக பகுதியொன்று  வியாழக்கிழமை  (29)  உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா விக்டோரியா பூங்கா வலாகத்தில் இயங்கும் மாநகர சபை பொது நூலகத்தில் ஆரம்பித்து கைக்கப்பட்டுள்ள "இந்தியன் கோனர்" நூலக பகுதியை ஆரம்ப நிகழ்வினை நுவரெலியா மாநகர சபை ஆணையாளரும்,நுவரெலியா மாவட்ட செயலாளருமான சுஜீவா போதிமான்ன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையின் செயலாளர் கே.கே.எம். பண்டார, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய ஊழியர்கள், நூலகப் பிரிவு மற்றும் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பொது நூலக வாசகர் கழக ஊழியர்கள், நுவரெலியா மாநகர சபை சமூக திணைக்கள ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆ.ரமேஸ், நீலமேகம் பிரசாந்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X