2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

இனி சிவனொளிபாதமலைக்கு வெளிநாட்டவர்கள் மாத்திரமே செல்லலாம்?

Freelancer   / 2024 மே 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

நல்லதண்ணி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X