2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”

Freelancer   / 2022 ஏப்ரல் 08 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொய்யான வாக்குறுதிகளை அளித்து பெருந்தோட்ட மலையக மக்களை ஏமாற்றியதே அரசாங்கத்தின் சாபக்கேடு என்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

டி எம் சௌந்தரராஜன் அவர்களின் “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலைப் பாடியதை தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கி இந்நாட்டு மக்களை வீதியில் இறக்கிய பெருமை இவ் அரசாங்கத்தையே சாரும் என்றார். 

மலையக மக்களைப் பொருத்தவரை இரட்டிப்பு ஏமாற்றம் பல்கலைக்கழகம் தருகின்றோம், ஆயிரம் ரூபாய் தருகின்றோம், அதைத் தருகிறோம், இதை தருகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மலையக மக்களை ஏமாற்றியதற்காகவே அரசாங்கத்திற்கு தற்போது இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மலையக மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள் மலையகத்தில் எங்களுக்கு விமான நிலையமும் இல்லை, கடலும் இல்லை. என்ன நேர்ந்தாலும் மலையகம் என் தாய்நாடு மலையகத்திலேயே என் உயிர் மூச்சு நிற்கும் மலையக மக்களின் உரிமைக்காக பாராளுமன்றத்தில் என் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் அப்பாவி பெருந்தோட்டத் தொழிலாளர்களை வஞ்சித்து பொய்யான வாக்குறுதிகளை அவர்களுக்கு வழங்கியதன் நிலையியே அரசாங்கம் நிர்க்கதியாகி இருக்கின்றது.

வீதியில் இறங்கி போராடும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்து ஒரு மாற்றத்திற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும் இத்தகைய சூழ்நிலையில் பதவி விலக மாட்டோம் என்று ஜனாதிபதி அவர்கள் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கின்றது என அவர் கருத்து தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X