2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இரட்டை சின்னங்களில் களமிறங்கும் ​இ.தொ.கா

R.Maheshwary   / 2023 ஜனவரி 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் யானை சின்னங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட் ,மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் கட்சி சின்னமான சேவல்  சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் களம் இறங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துலை நகர சபை மற்றும் ஹட்டன் நகர சபை ஆகியவற்றிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .