R.Maheshwary / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரே நேற்று (04) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர், 2022 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் இருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக பல்லேகல -தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026