மு.இராமச்சந்திரன் / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்கு, கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 3 இலட்சம் யாத்திரிகர்கள் வருகைத்தந்துள்ளனர் எனத் தெரிவித்த நல்லதண்ணி பொலிஸார், இதன்காரணமாக, நல்லதண்ணியிலிருந்து ரிக்காடன் வரையிலான மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கு, வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டதெனவும் கூறினர்.
விடுமுறை தினத்தையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான இரண்டு நாட்களில், மேற்படி வீதி வழியாக 300க்கும் அதிகமான வாகனங்கள் தரித்து நின்றதாகவும், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டதால், யாத்திரிகர்களுக்கு வழிபாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், யாத்திரிகர்கள் கொண்டுவந்த இசைவாத்தியக் கருவிகளை, மலையடிவாரத்துக்குக் கொண்டுச் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை பொலிஸ் நிலையத்தில் வைத்துவிட்டுச் செல்லுமாறு யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினர்.
யாத்திரிகர்களின் நலன் கருதி, நீர் விநியோகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரிவித்த பொலிஸார், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததெனவும் கூறினர்.
30 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago