Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 23 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 202 வேட்புமனுக்களில், பிரதான கட்சிகள் இரண்டின் வேட்பு மனுக்கள் இரண்டு நிராகரிக்கப்பட்டதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்கோன் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் தாக்கல செய்யப்பட்ட பின் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் , கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 22 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சிகள் உள்ளிட்ட 202 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, மெததும்பறை பிரதேச சபைக்காக ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுவும் கங்கவடகோரலய பிரதேச சபைக்காக ஜனநாயக மக்கள் முன்னணி தாக்கள் செய்தவேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதுடன், மேலும் சில வேட்பு மனுக்களில் சிலபெயர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இம்முறை வாக்களிப்பதற்கு 11, 68, 697 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களுள் 9555 புதிய வாக்காளர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago