R.Maheshwary / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட ஹொலிரூட் கிழக்கில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்று தீப்பரவலுக்கு உள்ளாகி, இரண்டு வருடங்கள் கடந்தும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்படாமையால், பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களிலும், தோட்ட கலாச்சார மண்டபத்திலும் தங்கியிருக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு, மே மாதம் குறித்த தீப்பரவல் ஏற்பட்டதுடன், இதன்போது நான்கு விடுகள் தீக்கரையாகின . இச்சம்பவம் இடம்பெற்று மறுகணம் ,அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை சந்தித்துள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைக்க முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் காணியை ஒதுக்கி, வீடுகள் கட்டுவதற்கான அடிக்கலைலை நாட்டிய போது, ஐம்பத்திரெண்டு நாள் அரசாங்கம் மாற்றப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.பின்னர் முழுமையாக அத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தோட்ட மக்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், இவ்வருடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு, காணி ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் இன்று வரை, சுவர்கள் மாத்திரம் ஏற்றப்பட்ட நிலையில் அவ்வ்வீடுகள் உள்ளன.
எனவே, தற்காலிக குடிசைகளிலும் கலாசார மண்டபத்திலும் தங்கியிருக்கும் தமக்கு, விரைவாக நிரந்தர வீடுகளை அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .