Kogilavani / 2021 மே 23 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால்சாந்த உதய
இரத்தினபுரி மாவட்டத்தில், சீரற்ற வானிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் மாலின லொக்குபோத்தாகம தெரிவித்தார்.
26 ஆம் திகதி வரை மழை வானிலை நீடிக்கும் என்பதால், கொவிட் 19 பரவலுடன் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு, கடும்காற்று உள்ளிட்ட அனைத்து அனர்த்த நிலைமைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான இடங்களில் அவர்களை தங்க வைப்பதற்குமான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் இடைத்தங்கள் முகாம்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் அனர்த்த நிலைமைகளை எதிர்கொண்டால் அவர்களைத் தங்க வைப்பதற்கான இடைத்தங்கள் முகாம்கள் பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, கிரிஎவ்வ, அயகம, கலவான, நிவித்திகல, எலபாத்த, பெல்மடுல்ல, கஹவத்த, ஓப்பநாயக்க, பலாங்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் களுகங்கையின் கிளை ஆறுகளான தெனவக்க, நிரிஎல்ல, குரு, கலத்துரு, குக்குலே ஆகிய கங்கைகளின் நீர்மட்டங்களை www.rivernet.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று அறிந்துகொள்ள முடியும் என்று அறிவுறுத்திய அவர் எனவே, கரையோரங்களில் வாழும் மக்கள் நீர்நிலைகள் பெருக்கெடுப்பதுத் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இடைத்தங்கள் முகாம்களின் தங்க வைக்கப்படுபவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago