Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 25 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
“இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்” என்று, இரத்தினபுரி மாவட்ட பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவின் அதிகாரி வைத்தியர் காஞ்சன உபசேன தெரிவித்தார்.
மேற்படி மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பியோகங்களை தடுப்பது குறித்து, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா தலைமையில் மாகாண சபை கட்டடத்தில், நேற்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் பலாங்கொடை ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக, பாடசாலை மாணவாகள் பாலியல் துஷ்பிரயோகளுக்குள்ளாகி வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில், இவ்வருடம் மட்டும் 30 சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக முறைபாடு கிடைத்தள்ளது.
தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் நாளாந்தம் தேடி பார்ப்பது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க,
சப்ரகமுவ மாகாணத்தில், பாடசாலை மாணவர்கள் பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவதை தடுப்பதற்கும் மற்றும் சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து அவர்களை காப்பாற்றுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும்.
இந்தக் கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண பிரதானச் செயலாளர் எச்.பி.குலரத்ன மற்றும் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .