Freelancer / 2022 மார்ச் 06 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மக்களை கடுமையாக பாதித்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசாங்கம் துரித தீர்வை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (05) இரவு தலவாக்கலையில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தலவாக்கலை பேருந்து நிலையத்திலிருந்து நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பேரணியாகச் சென்று தீப் பந்தம் ஏற்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் ஒடுக்குவதன் மூலம் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளிய அரசாங்கம் ஆட்சியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் முறையான முகாமைத்துவத்தை நிர்வாகத்தையும் செய்ய தெரியாதவர்கள் எமது நாட்டிற்கு தேவை இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோஷத்துடன் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவரும் கையில் தீப்பந்தம் ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். (R)









5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026