2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இராகலை தீ தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை தீ தொடர்பான விசாரணை இம்மாதம் (27) ஆம் திகதி வரை மீண்டும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இரவு இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் இந்த தீபரவியது. இதில், ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.

உயிர்தப்பியதங்கையாஇரவீந்திரன்இராகலைபொலிசாரால்கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், 72 நாள்களாகபதுளைசிறைச்சாலையில்விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் மேற்குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின்ஆறாவது தவணை விசாரணை இந்தமாதம் 20ஆம் திகதி இடம்பெறுமெனவும் இத்தினத்தில் சந்தேகநபரை வலப்பனை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற நீதவான்டி.ஆர்.எஸ்.ஜினதாச உத்தரவிட்டிருந்தார்.

எனினும், வருட  கடைசி மாதத்திற்கான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான விடுமுறை எதிர்வரும் 27ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதால்,அன்றைய தினம் வரையிலும் மேற்படி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வலப்பனை நீதிமன்ற பதிவாளர், நேற்று (20) தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X