2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இராகலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது

Editorial   / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று (17) காலை வெடித்து சிதறியது.
 
இராகலை பிரதேசத்தில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
 
இராகலை இரண்டாம் பிரிவில் இலக்கம் (09) லயன் தொடர் குடியிருப்பின் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் காலை 6.45 மணியலவில் இடம்பெற்றதாக  இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தண்ணீர் சுடவைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த போது அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X