Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 09 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் நுழைவாயில் பகுதியில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை இராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராகலை மந்திரித்தன்ன பகுதியை சேர்ந்த இந்த இளைஞர், தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் புகைத்தலில் ஈடுப்பட்டிருப்பதை அவதானித்தவர்கள் இராகலை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று(08) மாலை குறித்த இடத்தை சுற்றி வளைத்த சிவில் பொலிஸார் இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது இளைஞர் கஞ்சா புதைத்து கொண்டிருந்தமை உறுதியானது.
அத்துடன் அவரிடத்தில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளதாகவும்,இவரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இராகலை சில்வர்கண்டி தோட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பணையில் ஈடுப்பட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த மாதம் (25.10.2022) ஆம் திகதி முதல் இம்மாதம் (08.11.2022) ஆம் திகதி வரை மத்திய மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில் இராகலை பொலிஸ் நிலையத்தில் சேவையில் ஈடுப்படுத்தப்பட்ட பொலிஸ் குழுவினால் பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்தவர்கள், நீதிமன்றத்தால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என 25 க்கு மேற்பட்டவர்கள் இராகலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025