R.Maheshwary / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை- இராசகலையில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதி செய்யும் என காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் தமிழ் மற்றும் பெரும்பான்மை இன இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் அந்த தோட்டத்துக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்துள்ளார்.
இச்சம்பவமானது, முதலில் தமிழ் இளைஞர்களே தாக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றதுடன், இச்சம்பவத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் பெரும்பான்மையின இளைஞர்கள் பலாங்கொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, இச்சம்பத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞர்களை மாத்திரம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இதுவரை எந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரும் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள், நகரத்திற்கு செல்ல முடியாத வகையில் அச்சுறுத்தல்களும் இருப்பதாக பிரதேசவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago