R.Maheshwary / 2022 ஜனவரி 06 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆரம்பசிகிச்சைப் பிரிவுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் 22இட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, வைத்தியசாலையின் உதவி வைத்திய அதிகாரி ஜே.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (4) டிக்கோயாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
குறித்த வேலைத்திட்டத்தினை நாம் எமது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, தரிந்த பி. வீரசிங்க தலைமையில் ஆரம்பித்தோம் என தெரிவித்த அவர், எமது வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கமைய, மக்களுக்கு இந்த செய்தி சென்றடைய
வேண்டும் என்ற நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நோர்வூட் பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம் என்றார்.
தவிர்க்கமுடியாத காரணத்தினால் இராஜாங்க அமைச்சர் வருகை தர முடியாமல் போனதால், நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்டவர்கள் வருகைத் தந்திருந்தனர் என்றார்.
இந்த வைத்தியசாலையில் தான் உதவி வைத்திய அதிகாரியாக
பொறுப்பேற்ற நாள்முதல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பலதரப்பட்ட உதவிகளை செய்துகொடுத்துள்ளார்.
எனினும் ஆரம்ப சிகிச்சைப் பிரிவுக்கான நிதியை நாம் யாரிடமும் பெற்று கொள்ளவும் இல்லை. பெற்று கொள்ள வேண்டிய தேவையும் இல்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .