2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இரு மாடி கட்டடத் தொகுதி திறப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

அரசாஙகத்தின மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புரநெகும திட்டத்தின் மூலம், 460 இலட்சம் ரூபாய்  செலவில், தெரணியாகலை பிரதேச சபையில் புதிதாக அமைக்கப்பட்ட இரு மாடி கடடடத் தொகுதி, நேற்று(21) திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி கட்டடத்தொகுதியில் கேட்போர் கூடம், ஆயுர்வேத மத்திய நிலையம், பாராமரிப்பு நிலையம் மற்றும் வாராந்த சந்தை என்பன அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் ரஞ்ஜித் பொல்கம்பல, மாகாண அமைச்சின் பிரதான செயலாளர் சியாணி பத்மலதா, உதவி செயலாளர் எல்.எம.பி.டபிள்யு.பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .