2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரு வேறு பகுதிகளில் மண்சரிவு; ஆறு வீடுகள் சேதம்

Editorial   / 2021 மே 25 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன. 

வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  வெளிஓயா கீழ் பிரிவில் இன்று அதிகாலை  மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் கடும்  சேதத்திற்குள்ளாகியுள்ளன. 

அதே வேளை பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொயினோன் தோட்டப் பகுதியில் நண்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.

இந்நிலையில் மண்சரிவினால் ஏற்பட்ட சேத விபரம் தொடர்பில்  கிராம உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X