Freelancer / 2022 ஏப்ரல் 02 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
டிக்கோயா - புளியாவத்தை நகரில் இரும்புக்கடையொன்று திடீரென தீப்பற்றிக்கொண்டதில் அக்கடைக்கு மேல் மாடியில் இருந்த குடியிருப்பு பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
இதனால் அந்த குடியிருப்பு பகுதியிலிருந்த அனைத்து உடைமைகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
கடை தீப்பற்றிக்கொண்ட போது வீட்டில் உள்ளவர்கள் கடையின் மேல்மாடியில் இருந்துள்ள போதிலும், தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரில் அமைந்துள்ள இரும்பு பொருட்களில் சேகரிக்கும் கடையொன்றில் நேற்று (01) இரவு மின்துண்டிப்பின் போது சுமார் 8.30 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது.
இருள் நிறைந்து காணப்பட்டதனாலும் தண்ணீரினை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது போனதன் காரணமாகவும் தீயினை உடனடியாக அனைக்க முடியாது போனது.
பின்னர் கடையிலிருந்து கூச்சலிட்டதனால் பிரதேவாசிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பாரிய பிரயாத்தணத்திற்கு பின் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் நீர் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இருந்திருந்தால் பாரிய அளவு சேதம் ஏற்படாது தடுத்திருக்கலாம் என தீயணைப்பில் ஈடுபட்டிருந்து இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026