2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இருவேறு விபத்துகளில் இரு குழந்தைகள் பலி

Kogilavani   / 2017 ஜூலை 02 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

​பாலித ஆரியவன்ச, மொஹொமட் ஆஸிக்

வத்தேகம, மடுல்சீமை ஆகிய பகுதிகளில், சனிக்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில், இரண்டு மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மடவளையிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற காரிலிருந்து இரண்டு வயது குழந்தையொன்று கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளது. குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாத்தளையைச் சேர்ந்த பஹ்மான என்ற இரண்டு வயது பெண் குழந்தையே, இவ்வாறு பலியாகியுள்ளது.

காரின் கதவு திறப்பட்டதால் குழந்தை கீழே விழுந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதுளை, மடுல்சீமை பகுதியில் தந்தையொருவர் செலுத்திய லொறியின் முன் சில்லில் சிக்குண்டு, இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பாலச்சந்திரன் கௌசல்யா என்ற குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குழந்தையின் வீட்டுக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .