Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை, இன்று (21) பிற்பகல் 1.30 மணிக்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில், தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தம்சார் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போதும் எவ்விதத் தீர்மானமும் எட்டப்படவில்லை. இந்நிலையில்;, இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக காத்திரமானதும் இறுதியானதும் உறுதியானதுமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு இ.தொ.கா தீர்மானமாகவுள்ளது' என்றார்.
இன்றைய பேச்சுவார்த்தையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், சட்டத்தரணி கா.மாரிமுத்து ஆகியோரும் பெருந்தோட்டக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.இராமநாதனும் இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் 22 தோட்டக் கம்பனிகளும் கலந்துகொள்ளவுள்ளன.
தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவை பெற்றுக்கொடுக்க ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் இ.தொ.கா முன்வைக்குமென முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
01 Jul 2025